ஜி. நாகராஜன் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர். 1959 ஆம் ஆண்டு ஆனந்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் மனைவி தீ விபத்து ஒன்றில் இறந்து போனார்.